டிஜிட்டல் மோசடி - இந்தியாவில் 59000 வாட்சப் கணக்குகள் முடக்கம்..!
59000 whatsapp accounts closed in india for digital fraud
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் சஞ்சய் குமார் பதில் அளித்ததாவது:-
"உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,700 ஸ்கைப் கணக்குகள் மற்றும் 59,000 வாட்ஸ்அப் கணக்குகளை கண்டறிந்து முடக்கியுள்ளது.
நிதி மோசடி தொடர்பாக இதுவரை 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ரூ.3,431 கோடி மீட்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 15-ந்தேதி நிலவரப்படி 6.62 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 1.32 லட்சம் ஐ.எம்.இ.ஐ. நம்பர்கள் முடக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்த, மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் இந்திய மொபைல் எண்களை காண்பிக்கும் வகையில் வரும் சர்வதேச மோசடி அழைப்புகளை கண்டறிந்து தடுக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
59000 whatsapp accounts closed in india for digital fraud