5G அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்.. கைப்பற்றப்போவது யார்.? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இன்று தொடங்குகிறது.

5ஜி எனப்படும் 5-ம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட 4 முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக 5ஜி சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகமாக இருக்கும்.

இந்த நிலையில், 5ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்வதற்கான ஏலம் இன்று தொடங்குகிறது. 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பிரிவுகளாக 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலம் நடைபெறுகிறது. 

இது 20 ஆண்டுகளுக்கானது. இதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகியவை கடும் போட்டியிடுகின்றன. அதிகபட்சமாக 14 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செலுத்தியுள்ளது. 

காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை ஏலம் நடைபெறும். இந்த மாத இறுதிவரை ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5G spectrum auction starts today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->