நீலிமலையில் அய்யப்ப பக்தர் உயிரிழப்பு - ரூ.5 லட்சம் காப்பீடு உதவி வழங்க தேவஸ்தானம் முடிவு.! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜைக்காக கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் தினமும் 18 மணி நேரம் தரிசனத்துக்காக நடை திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரத்தில் இருந்து வந்த முருகாச்சாரி என்ற பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி மலையேறி சென்று கொண்டிருந்தார். அதன் படி அவர் நீலிமலை என்ற இடத்தை சென்றடைந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. 

பிறகு அவர் அங்குள்ள இதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீடு உதவி வழங்கப்படும் என்றும் ஏற்கனவே திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதன்படி முருகாச்சாரி குடும்பத்திற்கு உடனடியாக ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five lakhs compensation announce to sabarimalai devotee for death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->