மக்களே உஷார்.. தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கபோகும் மழை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

நேற்று முன்தினம், டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும், நேற்றும் கனமழையும் பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 19 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தற்போது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தெற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 23-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், வடதமிழகம், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் மீண்டும் மழைக்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in tamilnadu south districts metereological center info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->