குடிக்க பணம் தர மறுத்த மனைவி - மதுபோதையில் கணவர் செய்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் வசித்து வரும் கரண் என்ற நபர் தனது மனைவியிடம் மது குடிக்க வேண்டுமென்று ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் மதுபோதையில் இருந்த கரண் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதைப்பார்த்து அங்கு கூடிய மக்கள் அவரிடம் பணம் தருவதாகவும், மது பாட்டில் வாங்கித் தருவதாகவும் கூறி கீழே இறங்க சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கரணை கீழ் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், கரண் போலீசாருக்கு நீண்ட நேரமாக போக்கு காட்டியுள்ளார். பின்னர் போலீசாரின் நீண்ட நேர முயற்சிக்கு பின்பு கரண் கீழே இறங்கி வந்தார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man threat commit sucide for wife no money


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->