6ம் கட்ட மக்களவை தேர்தல் : மொத்தம் 61.2 சதவீத வாக்குகள் பதிவு.. மாநில வாரியாக பதிவான வாக்குகள்!! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 61.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் மே 13ஆம் தேதி நான்காம் கட்ட மக்களவை தேர்தலும் மே 20 தேதி 5ம் கட்ட மக்களவைத் தேர்தலும், நேற்று ஆறாம் கட்ட மக்களவை தேர்தலும் நிறைவடைந்துள்ளது.

ஆறு மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. 

 காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஆறாம் கட்ட மக்களவை தேர்தலில் மொத்தம் 61.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரபலங்களாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி ஆகியோர் வாக்களித்தனர்.

6ம் கட்ட மக்களவை தேர்தலில் 61.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பீகாரில் 8 நாடாளுமன்ற தொகுதிகளில் 55.24 சதவீத வாக்கு பதிவு, ஹரியானாவில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் 60.4 சதவிகித வாக்குப்பதிவும், ஜம்மு காஷ்மீர் 1 நாடாளுமன்ற தொகுதியில் 54.30 சதவீத வாக்குப்பதிவும், ஜார்க்கண்ட்டில் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் 63.76 சதவிகித வாக்குப்பதிவும், டெல்லியில் 7 நாடாளுமன்ற தொகுதியில் 57.67 சதவிகித வாக்கு பதிவும், ஒடிசாவில் 6 நாடாளுமன்ற தொகுதிகளில் 69.56 சதவிகித வாக்குப் பதிவும், உத்திர பிரதேஷ்சில் 14 மக்களவைத் தொகுதியில் 54.03 வாக்குப்பதிவும், மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதியில் 79.47 பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6th phase election state VotePolling country list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->