100 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி.! 23 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா கோவிலில் 100 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள பாலாபூர் தாலுகாவிற்குட்பட்ட பரஸ் கிராமத்தில் அமைந்துள்ள பாபுஜி மகாராஜ் கோவிலில் மகாஆர்தி நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7.30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்பொழுது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையில் நின்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, கோவிலில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று தகர கொட்டகையின் மீது முறிந்து விழுந்தது. இதில் கொட்டகையின் கீழ் நின்றிருந்த 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் காயமடைந்தவர்கள் அகோலா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 killed 23 injured after 100 year old tree falls on tin shed at temple in Maharashtra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->