15000 அடி உயரத்தில் குடியரசு தின விழா கொண்டாடிய ராணுவ வீரர்கள்.. வைரலாகும் வீடியோ.!
73 republic day celebration in ladakh
இன்று இந்திய நாட்டின் 73வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அதனையடுத்து தலைநகர் டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1750 இல் குடியரசாக அறிவிக்கப்பட்டு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 26ம் தேதி இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்துகிறார்.
இந்த நிலையில் லடாக் எல்லைப் பகுதியில் 15 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் 73வது குடியரசு தினத்தை இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் கொண்டாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
73 republic day celebration in ladakh