எப்போது பார்த்தாலும் போட்டோஷூட்..முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!
Whenever you see a photoshoot. Edappadi Palaniswami slams Stalin
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது என்றும் முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோஷூட் செய்து வருகிறார் என்றும் தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல.. ஸ்டாலின் மாடல் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது;தேனி மாவட்டத்துக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்றும் 4 ஆண்டுகளில் திமுக அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என பேசினார். மேலும் முல்லை பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளனர் என்றும் முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டத்தை உயர்த்தியது அதிமுக அரசு என்றும் அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டுவந்ததால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி நிற்கின்றோம் என கூறினார்.
மேலும் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்களே பாராட்டுகின்றனர் என்றும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நன்மை அளித்தது. ஏழை, எளிய மாணவர்கள் படிக்க ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன என கூறினார்.
மேலும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை என்றும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக உள்ளது என கூறினார் .
மேலும் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை நெஞ்சை பதறச் செய்கிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் சிறுமிகள் அப்பா.. அப்பா.. என்று கதறும்போது அப்பா ஸ்டாலின் எங்கே போனார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் அண்ணா பல்கலை. வழக்கில் யார் அந்த சார் என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது என்றும் முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோஷூட் செய்து வருகிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல.. ஸ்டாலின் மாடல்."இவ்வாறு அவர் பேசினார்.
English Summary
Whenever you see a photoshoot. Edappadi Palaniswami slams Stalin