தமிழகத்தின் 8 மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை!
TN Govt Order ICU In Govt Hospital
தமிழகத்தில் புதிதாக 5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கவும், 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கவும், 122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 50 ஒரே நேரத்தில் 50 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வசதியை ஏற்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர், தென்காசி, திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கவும் அரசாணை நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசாணையில் விவரம்: அரசு, முழுமையான பரிசீலனைக்கு பிறகு, முக்கிய சிகிச்சை பிரிவுகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களை அமைப்பதற்காக ரூ.122,50,00,000/- (ரூபாய் நூற்று இருபத்து இரண்டு கோடி ஐம்பது லட்சம் மட்டும்) நிர்வாக அனுமதியை வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கட்டிட பணிகளை செயல்படுத்த ரூ.103,00,00,000/- (ரூபாய் நூற்று மூன்று கோடி மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டிடப் பணிகள் பொது பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
English Summary
TN Govt Order ICU In Govt Hospital