பிபோர்ஜாய் புயல் எதிரொலி: 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்..!
8 thousand people evacuated to safe places due to biborjoi cyclone
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் பிபோர்ஜாய், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு சற்றே வலுக்குறைந்து மிகத்தீவிர புயலாக இன்று காலை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் இன்று இரவு வரை, வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15ஆம் தேதி மாலை மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும்.
அப்பொழுது காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் வசித்துவந்த 8,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
புயல் கரையை கடக்கும் பொழுது குஜராத் மாநிலத்தின் கட்ச், தேவபூமி துவாரகா, போா்பந்தா், ஜாம்நகா், ராஜ்கோட், ஜுனாகா், மோா்பி ஆகிய மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் காரணமாக 16ஆம் தேதி வரை கட்ச் கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
8 thousand people evacuated to safe places due to biborjoi cyclone