திருமணத்துக்கு வராதீங்க.! வினோதமான முறையில் பத்திரிக்கை அடித்த தந்தை.! - Seithipunal
Seithipunal


மதுவின் காரணமாக பல திருமண நிகழ்வுகளில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு திருமணங்கள் தடைபடும் அளவிற்கு கூட சென்றதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பல திருமண நிகழ்வுகளில் மது அருந்தியவர்கள் செய்யும் பிரச்சனைகளால் சந்தோசமாக இருக்க வேண்டிய தருணங்கள் அசௌகரியங்கள் நிறைந்ததாக மாறும். 

இது போன்ற பிரச்சனைகள் நிகழாமல் இருக்க புதுமையான  ஒரு யுக்தியை கையாண்டிருக்கிறார் குஜராத்தைச் சார்ந்த ஒரு தந்தை. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டையை சார்ந்த அந்த நபர் தனது மகளுக்காக பிப்ரவரி 23ஆம் தேதி திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து திருமணப் பத்திரிக்கையில் மது போதையில் இருப்பவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தெளிவாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.இந்தப் பத்திரிக்கையின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது மகளின் திருமணத்தில் எந்த வித இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும் என அந்தத் தந்தை இவ்வாறு செய்திருப்பதாக பலரும் இந்த பத்திரிக்கையை பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a gujarathi father made an interesting invitation to avoid any intereption in her daughter wedding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->