U-TURN பிரச்சனையால் பறிபோன உயிர்...!!! - ஆத்திரத்தில் சிறுவர்கள் செய்த காரியம் என்ன?
A life lost due U TURN problem boys anger cause
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வசிக்கும் 'ஜெயேஷ்பாய்' என்பவர், சூரத்துக்கு தனது சகோதரர் பாரத்பாயுடன் தங்குவதற்காக வந்திருந்தார்.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தவறான திசையில் 2 சிறுவர்கள் ஸ்கூட்டரை ஓட்டி வந்தனர். தவறாக வந்ததால் பாரத்பாய் சிறுவர்களைக் கண்டித்துள்ளார்.
இதற்கு கோபம் கொண்ட சிறுவர்கள் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டினர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஜெயேஷ்பாய் சிறுவர்களில் ஒருவரின் கன்னத்தில் பளார் என்று அறைந்து, U-TURN எடுத்து சரியான பாதையில் செல்லுமாறு தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் முன் சிறுவர்கள் இருவரும் தங்கள் வழியில் சென்றனர். ஆனால் அவர்களை சிறுவர்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர் .இதில் சிறுவர்களில் ஒருவர், ஜெயேஷ்பாயின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர்.மேலும் இதுகுறித்த விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
English Summary
A life lost due U TURN problem boys anger cause