நண்பனை பெண்ணாக மாற்றி திருமணம் செய்ய வற்புறுத்திய நபரால் உத்திரபிரதேசத்தில் பரபரப்பு..!!
A Mand Genitals Removed And Forced To Be Married By His Friend In U P
உத்திரபிரதேசத்தில் உள்ள முசாபர் நகரைச் சேர்ந்த முஜாஹித் என்ற 20 வயது இளைஞரை இவரது நண்பர் ஓம் பிரகாஷ் மயக்க மருந்து கொடுத்து கட்டாய பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததோடு, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து முஜாஹித் தெரிவிக்கையில், "எனது உடலில் பிரச்சினை இருப்பதாக கூறி ஓம் பிரகாஷ் என்னை பேக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றார். அங்கு எனக்கு மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்து பின்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்த விஷயம் எனக்கு காலையில் மருத்துவர்கள் மூலம் தான் தெரிய வந்தது. மேலும் ஓம் பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். மறுத்தால் என் தந்தையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
நீ பெண்ணாக மாறி விட்டதால் இனி உன் குடும்பத்தில் உன்னை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நான் உன் தந்தையை கொன்று விட்டு உன் குடும்ப சொத்துக்களை அபகரித்துக் கொள்வேன் என்று ஓம் பிரகாஷ் மிரட்டினார்" என்று முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த மருத்துவக் கல்லூரி முன்பு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக முஜாஹித்தின் தந்தை போலீசில் ஜூன் 16 அன்று புகாரளித்தன் பேரில் ஓம் பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
A Mand Genitals Removed And Forced To Be Married By His Friend In U P