சீறி பாய்ந்த கார்... தாவி பிடித்த காவலர்... கண்டுக்கொள்ளாத கஞ்சா ஆசாமி! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் கஞ்சா போதையில் இருந்த ஒருவர் போக்குவரத்து காவலருக்கு செய்த கொடூரமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்க்கர் மாவட்டத்தில் உள்ள பீம் பீச் சாலையில்  போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை முறைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது விதிமுறைகளை மீறி வேகமாக ஒரு கார் வந்தது. அந்தக் காரினை போக்குவரத்து காவலர் மோகன் மாலி(3)7) நிறுத்த முயன்றார். ஆனாலும் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. 

இதனைத் தொடர்ந்து காரை தாவி பிடித்தார் போக்குவரத்து காவலர். அவரால் முன் பக்கம் பேனட்டை மட்டுமே பிடிக்க முடிந்தது போக்குவரத்து காவலர் பேனட்டிலிருப்பதை அறியாமலே அந்தக் காரை ஓட்டி வந்த நபர் வேகமாக சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவலரை இழுத்து சென்று 20 கிலோமீட்டர் கழித்து போலீசார் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கஞ்சா போதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரிய வந்திருக்கிறது. அந்த நபரின் பெயர் ஆதித்யா என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும்  பொது இடத்தில் ஆபத்தை விளைவித்தால் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A policeman was brutalized by a ganja intoxicated driver in Maharashtra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->