''ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில், சமூகம் உருவாக்கப்பட வேண்டும்'' ஜனாதிபதி முர்மு மகளிர் தின வாழ்த்து செய்தி..!
A society should be created in which every woman feels safe President Murmu Womens Day greetings
இன்று மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து, ஜனாதிபதியின் செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜனாதிபதி அவர்கள், அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி ஜனாதிபதி முர்மு பேசுகையில், பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் தனித்துவ பங்காற்றியதற்காகவும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்வாக சர்வதேச மகளிர் தினம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர், நம்முடைய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் ஆக இருக்கிறார்கள். இன்னல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும் பல்வேறு துறைகளில் தங்களுடைய அடையாளங்களை அவர்கள் பதித்து வெற்றி கண்டுள்ளனர் என கூறியுள்ளார்.
எனினும், பெண்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்த நிறைய விசயங்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளை பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று பேசியுள்ளார்.

அத்துடன் சாதனை படைத்த அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன், அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைவதற்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
English Summary
A society should be created in which every woman feels safe President Murmu Womens Day greetings