ஆந்திரா: மின்னணு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.!
A terrible fire in an electronic equipment manufacturing company in Andhra
ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் அருகே பாக்ஸ்லிங்க் என்னும் மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து அனைத்து இடங்களுக்கும் பரவ தொடங்கிய நிலையில், தொழிலாளர்கள் அனைவரும் ஆலையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்த தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதையடுத்து இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A terrible fire in an electronic equipment manufacturing company in Andhra