50 ரூபாய் திருடியாதாக சந்தேகப்பட்டு சுங்கச்சாவடி ஊழியர் அடித்து கொலை- பீகாரல் பகீர் சம்பவம்! - Seithipunal
Seithipunal


பிகாரில் 50 ரூபாயை திருடியதாகக் கூறி 35 வயது நபர் அடித்து கொல்லப்பட்ட சம்வபம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியை  சேர்ந்த 35 வயதான பல்வந்த் சிங் என்பவர் பிகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் குல்ஹாரியாவில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்தார்.

சுங்கக்கட்டணத்தில் பல்வந்த் சிங் 50 ரூபாய் திருடியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து , அந்த இளைஞரை சக பணியாளர்களும், பவுன்சர்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பல்வந்த் சிங், சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 50 ரூபாய் திருடியதாக கூறி 35 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வந்த் சிங் தாக்கப்படும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இந்த விவகாரம் காவல்துறை கவனத்திற்கு சென்றுள்ளது.

விசாரணையில் உயிரிழந்த பல்வந்த் சிங்க கடந்த 6 மாதங்களாக அங்கு பணியாற்றி வந்துள்ளார் என்றும் பல்வந்த் மீது சக ஊழியர்கள் திருட்டு புகார் கொடுத்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பவுன்சர்கள் மற்றும் சில ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பவுன்சர்களில் 4 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் எனவும் 2 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A toll booth employee was beaten to death on suspicion of stealing 50 rupees - shocking incident in Bihar!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->