விபத்தில் பற்களை இழந்த இளைஞர்; சக மாணவர்களின் கிண்டலால் எடுத்த எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் விபத்தில் பற்களை இழந்த விரக்தியில் இருந்த 18 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் புவனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் விக்னேஷ் (18 வயது). அந்தப்பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் (ஐ.டி.ஐ.) படித்து வந்தவர்.

இவர் கடந்த 04 ஆண்டுகளுக்கு முன்பு பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். இதன் போது அவருக்கு முகத்தில் பலத்த காயம் அடைந்ததில், அவர் 17 பற்களை இழந்துள்ளார். இந்நிலையில், செயற்கை பற்களை பொருத்துவதற்காக பல மருத்துவமனைகளுக்கு விக்னேஷ் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், செயற்கை பற்களும் பொருத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் மிகவும் மனமுடைந்துள்ளார்.

அத்துடன், பற்கள் இல்லாததால் விக்னேசை அக்கம்பக்கத்தினரும், அவருடன் படிக்கும் சக மாணவர்களும் கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது பெற்றோர் வெளியே சென்று வீட்டுக்கு திரும்பி வந்தபோது, விக்னேஷ், தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர்.  இதில் விக்னேஷ் விபத்தில் பற்களை இழந்ததால் விரக்தியில் இருந்த  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:

தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050

இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man lost his teeth in an accident Shocking decision made by fellow students after being teased


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->