30 ஆம் தேதி ஸ்தம்பிக்க போகும் டெல்லி - ஆம் ஆத்மியின் அறிவிப்பால் பரபரப்பு.!
aam adhmi party strike announce coming 30th
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்த கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வருகிறார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஜூலை 12-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ பதிவு செய்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், திகார் சிறை நிர்வாகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் வருகிற 30-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
English Summary
aam adhmi party strike announce coming 30th