குடியரசு தலைவர் ஆட்சி! டெல்லி அரசை கவிழ்க்க சதி - டெல்லி நிதியமைச்சர் பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசை கவிழ்க்க சாதி நடப்பதாக டெல்லி நிதியமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி  குற்றம் சாட்டியுள்ளார்.

மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில்அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர முயற்சி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசை கவிழ்க்க சதி நடப்பதால் தான், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசு அதிகாரிகள் கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டனர். துணை நிலை ஆளுநரின் அழுத்தும் காரணமாக முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை உள்துறை அமைச்சகம்  நீக்கியுள்ளது; 

இவை அனைத்தும் டெல்லி மாநில அரசை கவிழ்க்க நடக்கும் சதியை காட்டுகிறது” என்று தனது பேட்டியில் அதிஷி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAP Atishi Say Delhi Government 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->