கேதார்நாத், பத்ரிநாத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு! வைரலாகும் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வது வழக்கம். 

கொரோனா பரவல காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்கள் ஆன்மீக பயணம் செல்லாமல் இருந்தார். இதனை தொடர்ந்து கொரோனா தளர்வு ஏற்பட்டதும் கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். 

பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்ற ரஜினிகாந்த் அங்குள்ள சுவாமிகளை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ''வேட்டையன்'' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டார். 

இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களில் வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மேலும் அடுத்த மாதம் 3 ஆம் தேதி அல்லது 4 ஆம் தேதி ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Rajinikanth visit Kedarnath Badrinath


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->