அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி! - Seithipunal
Seithipunal


அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில்  முதலிடம் பிடித்துள்ளார்.

ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் இந்தியாவில் ஒவ்வொரு  உருவாகி வருவதாகவும், கடந்த ஆண்டை  விட, இந்தாண்டு கூடுதலாக 220 பேர் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில், ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் அதிக சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணக்கை 1539 ஆக அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து, 1,334 பேரின் ஒட்டுமொத்த சொத்து விகிதம் உயர்ந்துள்ளதாகவும், 272 பேர் புதிய பணக்காரர்களாக உருவெடுத்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்ப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் துறைகளின் வளர்ச்சியாகும்.

மேலும், 205 பேரின் சொத்துக்கள் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், 45 பேர் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் 354 பேர் ரூ.100 கோடிக்கும் மேல் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக அறிக்கையில் கூறப்படுகிறது. அதிலும், 21 வயதுடைய இளம் தொழிலதிபரும் இந்தப் பட்டியலில் இருப்பது தான் ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தொழிலதிபர் அதானி இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி தொழிலதிபரான அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். மூன்றாவது இடத்தில் எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உள்ளார்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலில்,1.கவுதம் அதானி - 11.61 லட்சம் கோடி 2.முகேஷ் அம்பானி - 10.14 லட்சம் கோடி 3.ஷிவ் நாடார் -3.14 லட்சம் கோடி 4.சைரஸ் பூனாவாலா - 2.89 லட்சம் கோடி 5.திலிப் சங்வி - 2.49 லட்சம் கோடி 6.குமார்மங்கலம் பிர்லா - 2.35 லட்சம் கோடி 7.கோபிசந்த் ஹிந்துஜா - 1.92 லட்சம் கோடி 8.ராதாகிஷன் தமானி - 1.90 லட்சம் கோடி 9.அஸீம் பிரேம்ஜி - 1.90 லட்சம் கோடி10.நீரஜ் பஜாஜ் - 1.62 லட்சம் கோடி இடத்தில உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adani pushed back Ambani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->