பெரும் சோகம்! அக்னி ஏவுகணைகளின் தந்தை! ராம் நாராயண் காலமானார்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அக்னி ஏவுகணை  திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் காலமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1983 ஆம் ஆண்டு இந்தியாவால் தொடங்கப்பட்ட அக்னி ஏவுகணை திட்ட இயக்குனராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு அக்னி ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்க கடும் உழைப்பை செலுத்தினார்.

ஏவுகணைகளை உருவாக்குவதற்கு அடித்தளம் ராம் நாராயணன் அக்னி ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சில காலங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வாக இயக்குனராகவும் ராம்  நாராயண அகர்வால் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியில் ராம் நாராயணன் பங்கினை போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2000 ஆண்டு பத்மபூஷன் விருதுகளை வழங்கிய மத்திய அரசு கௌரவித்தது.

முன்னாள்  இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தனது சுயசரிதத்தை புத்தகமாக அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம்நாராயணன் பங்கினை நினைவு கூர்ந்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அக்னி ஏவுகணை திட்டத்தின் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ராமநாராயணன். வயது மூப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ராம் நாராயணன் அகர்வால் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agni is the father of missiles Ram Narayan passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->