லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் திடீர் தரையிறக்கம்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் திடீர் தரையிறக்கம்.! நடந்தது என்ன?

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள விமான நிலையத்திலிருந்து இன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனிலுள்ள ஹீத்ரோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 

இதையடுத்து இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென விமான ஊழியர்களை தாக்கி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் விமானியிடம் தகவல் அளித்தனர்.

இந்தத் தகவலை கேட்ட விமானி உடனடியாக விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். அதன் பின்னர், விமான ஊழியர்களை தாக்கிய பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும், விமான ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பயணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து விமானம் எஞ்சிய பயணிகளுடன் டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டு சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india flight emergency landing in delhi airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->