ராஜஸ்தானில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் ஆகாஷ் அம்பானி.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் 5ஜி சேவையை ஆகாஷ் அம்பானி இன்று தொடங்கி வைத்தார்.

5ஜி தொலைதொடர்பு சேவையை கடந்த அக்டோபர் 1-ந்தேதி டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தற்போது இருக்கும் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5ஜி சேவையை, அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அறிமுகம் செய்ய உள்ளதாக இந்தியாவின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா நகரத்தில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி இன்று தொடங்கி வைத்தார். ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் படிப்படியாக ஒவ்வொரு நகரங்களுக்கும் 5ஜி சேவை கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பரில், ஸ்ரீநாத்ஜியை தரிசனம் செய்த முகேஷ் அம்பானி, ​​நாதத்துவாராவில் உள்ள கோவிலில் இருந்து 5ஜி சேவை தொடங்கப்படும் என்று உறுதியளித்தார். இதன்படி இன்று, 5G சேவை தொடங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akash Ambani launched 5G service in Rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->