சற்றுமுன் : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ்! பரபரப்பில் உ.பி அரசியல் களம்!!
Akhilesh Yadav resigned as MLA
உத்திரபிரதேசம் : சமாஜ்வாஜ் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து உத்தரபிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தது. மக்களவைத் தேர்தலில் 37 இடங்களைப் பெற்று சமாஜ்வாதி கட்சி இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதனால் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசம் மாநிலம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்துள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் விரைவில் அகிலேஷ் யாதவ் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். மக்களவை தேர்தலில் 37 உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாக சமாஜ் கட்சி உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் மக்களவை குழு தலைவராக அகிலேஷ் யாதவ் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Akhilesh Yadav resigned as MLA