மம்தா பானர்ஜி தான் அடுத்த பிரதமர்... திமுக முக்கியத்துவம் பெறும்.. பொருளாதார நிபுணர் அமர்த்யா சென் கருத்து..!!
Amartya Sen said Mamata Banerjee may become Prime Minister
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது "எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க மாநில கட்சிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். இந்தியாவின் பிரதமராகும் தகுதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்ளது.
அதேசமயம் பாஜகவுக்கு எதிராக அதிருப்தியில் உள்ள மக்கள் சக்தியை ஒன்று திரட்ட முடியும் என்பதை இன்னும் அவர் நிரூபிக்கவில்லை. இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான பல கட்சிகள் தனித்தனியாக சிதறி கிடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் பாஜகவுக்கு மாற்றாக வேறு எந்த அணியும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவான ஒற்றைக் குதிரை பந்தயம் போல் அமையும் என நினைத்தால் அது தவறு. எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெறும் என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி கட்சி போன்ற மாநில கட்சிகள் சற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். மாநிலக் கட்சிகளால் மட்டுமே இந்தியாவின் தொலைநோக்கை வழங்க முடியும்" என தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
Amartya Sen said Mamata Banerjee may become Prime Minister