தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்த ஆம்பூர் கல்லூரி மாணவன் மிர் அனாஸ் அலி கைது.!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் மிர் அனாஸ் அலி. இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு மிர் அனாஸ் அலி ஆதரவு அளித்து வருவதாக சந்தேகத்தின் பேரில் நேற்று மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அவரை ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அவரை பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.  

இதனையடுத்து, நேற்று மாலை சென்னையில் இருந்து தொழில்நுட்பக் குழுவினரை வர வைத்து, அவர்கள் மூலம் மிர் அனாஸ் அலியின் செல்போன் மற்றும் லேப்டாப்களில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambur College Student Arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->