தோல்வி அடைந்ததும் ராகுல் இதைத்தான் சொல்வார் - அமித்ஷா கடும் விமர்சனம்!  - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசி இருப்பதாவது, 

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளது. அன்று பிற்பகலில் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள். 

அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களால் நாங்கள் தோற்று விட்டோம் என தெரிவிப்பார்கள். தங்கள் தோல்விக்காக வாக்குப்பதிவு எந்திரங்களை பழி சொல்வார்கள். மக்களவைத் தேர்தலில் முதல் ஐந்து கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி 310 இடங்களில் வெற்றி பெற்று விட்டார். 

ராகுல் நீங்கள் 40 இடங்களில் கூட வெற்றி பெற மாட்டீர்கள். அகிலேஷ் யாதவுக்கு வெறும் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும். பாகிஸ்தானில் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜகவினருக்கு அணுகுண்டுகளை கண்டு பயமே கிடையாது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். நாங்கள் அதை திருப்பி எடுத்து விடுவோம். அகிலேஷ் யாதவ் ஆட்சியில் சகாரா சிட்பண்ட் ஊழல் நடைபெற்றது. மோடி தான் அந்த பணத்தை மக்களுக்கு திரும்ப வழங்கும் பணிகளை தொடங்கினார் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Amit Shah criticizes Rahul 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->