அமித்ஷா உத்தரவு!!! அதிகாரிகள் மணிப்பூரில் சாலைகளில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்தாக வேண்டும்.... - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில், கடந்த 2 ஆண்டுகளாகக் கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதில் குவி மற்றும் மெய்தி  இன மக்களுக்கு இடையேயான இந்த இனக்கலவரத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் முழுமையாக இந்த வன்முறையை ஒழிக்க முடியவில்லை. இந்நிலையில் கலவரத்தைத் தூண்டும் வகையில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது.




அமைச்சர் அமித்ஷா:
இந்த விவகாரத்தில் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததால் மணிப்பூரில் கடந்த மாதம் 13ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, " மார்ச் 8 ஆம் தேதியில் இருந்து மணிப்பூர் மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சாலைகளில் தடங்கல் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah orders Authorities must ensure people move freely on roads Manipur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->