போலியான பாலியல் புகார் அளிக்கும் பெண்கள்; சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


பாலியல் வன்கொடுமை தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறி,  அப்பாவி ஆண்களை சிக்க வைக்கும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமின் வழங்கும் போது நீதிபதி பி.வி. குஞ்சிகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  இந்த வழக்கில், சரியாக வேலை செய்யாததற்காக, நிறுவனத்தின் மேலாளர், புகார்தாரான அந்த பெண்ணை வேலையில் இருந்து நீக்கியுள்ளார். அதன் பின்னர், அந்த பெண்ணை வாய்மொழியாக திட்டியதாகவும், மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் அளித்த புகாரை போலீஸ் சரியாக விசாரிக்க வில்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்றைய காலகட்டத்தில் அப்பாவி மக்கள் மீது கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு உள்ளது. புகார்தாரர் ஒரு பெண் என்பதால், அவரது கூறுவது முற்றிலும் உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புகார்தாரர் ஒரு ஆண் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக காவல்துறை கண்டறிந்தால், அந்தப் பெண் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில், தான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், பாலியல் நோக்கத்துடன் தனது கைகளைப் பிடித்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர், அந்தப் பெண்ணின் வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து போலீசில் புகார் அளித்தார், மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, அவர் பேசியவற்றின் ஆடியோ பதிவு அடங்கிய பென் டிரைவையும் கொடுத்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அந்த தீர்ப்பில், 'தவறான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு ஏற்படும் சேதத்தை பணம் செலுத்துவதன் மூலம் மட்டும் ஈடுசெய்ய முடியாது. அவரது நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் போன்றவற்றை ஒரே ஒரு பொய் புகாரால் நாசம் செய்ய முடியும். 

எனவே, இது போன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு காவல்துறை இருமுறை யோசிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரின் தரப்புகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்.' எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The court ordered legal action to be taken against women who file fake sexual complaints


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->