''ஜெலன்ஸ்கியை அடிக்காமல் அதிபர் டிரம்ப் எப்படி கட்டுப்பாட்டுடன் இருந்தார்''..? ரஷ்யா வெளியுறவு அமைச்சகம்..!
How did President Trump control himself from hitting Zelensky Russian Foreign Ministry
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளைமாளிகை பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போது அவர் ''கடந்த 2022-இல் உக்ரைன் எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தது என அவர் கூறினார். இதனை ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது. ''உக்ரைன் அதிபர் கூறிய பொய்களில் மிகப்பெரிய பொய்'' என ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி டிரம்ப் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியதாவது: ''வாக்குவாதத்தின் போது, ஜெலன்ஸ்கியை தாக்காமல் டிரம்ப் அதிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ''2022-இல் உக்ரைன் எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தது என வெள்ளை மாளிகையில் அவர் கூறியது தான் ஜெலன்ஸ்கி கூறிய பொய்களில் மிகப்பெரிய பொய்.ஜெலன்ஸ்கியை அடிக்காமல் அதிபர் டிரம்ப்பும், துணை அதிபர் வான்சும் எப்படி கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள் என்பது அதிசயம். தனக்கு ஆதரவு அளித்த கைகளையே ஜெலன்ஸ்கி பதம் பார்த்து விட்டார். யாராலும் விரும்பப்படாதவராக ஜெலன்ஸ்கி உள்ளார்.'' என்று மரியா ஜகரோவா தெரிவித்துள்ளார்.
English Summary
How did President Trump control himself from hitting Zelensky Russian Foreign Ministry