பரபரப்பு! நடுரோட்டில் எதிர்க்கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை! பதற்றமான சூழல்! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி நிர்வாகி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் பல் நாடு மாவட்டம் விணுகொண்டாவை சேர்ந்தவர் ஷேக் ரசித் இவர் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள மதுபான கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பு இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி என்பருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தலின் போது ஷேக் ரஷீத், ஷேக் ஜிலானி வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஷேக் ரசித்து மீது  கடும் கோபத்தில் ஷேக் ஜிலானி சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மதுபான கடையில் வேலையை முடித்துவிட்டு ஷேக் ரசித்து வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது அங்கு வந்த ஷேக் ஜிலானி ரசித்தை இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார். ரசித் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்துள்ளார்.

ரசித்தை வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து ஜிலானி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. ஷேக் ரசித்தை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh YSR Congress Party youth leader hacked to death in the middle of the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->