மொழி வேறு.. அறிவு வேறு - ஆந்திர முதல்வர் பரபரப்பு பேட்டி..!
andira cm chandra babu nayudu speech about three language
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க இயலாது என்றும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும், மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மும்மொழிக் கொள்கை விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது:- "மொழி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமே... உலகளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள்.
அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட பத்து மொழிகளை ஊக்குவிக்க உள்ளேன். மாணவர்கள் அங்கு சென்று படிக்கலாம், வேலை செய்யலாம். அவர்களுக்கு உங்கள் சேவை தேவை. நான் மூன்று மொழிகள் அல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்.
தெலுங்கை ஊக்குவிக்க வேண்டும். வாழ்வாதாரத்திற்கான சர்வதேச மொழி என்பதால் ஆங்கிலத்தையும் ஊக்குவிக்க வேண்டும். இந்தி கற்றுக்கொள்வது நல்லது. அதனால் நாம் மக்களுடன் எளிதாக பழக முடியும்.
English Summary
andira cm chandra babu nayudu speech about three language