கொல்கத்தா பயிற்சி டாக்டர் கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்; சி.பி.ஐ., தரப்பில் மேல்முறையீடு
Appeal filed by the CBI in the Kolkata trainee doctor murder case
கொல்கத்தா மேற்கு வங்கத்தில் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு துாக்கு தண்டனை வழங்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்துள்ளது.
ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆகஸ்ட் 09-ஆம் தேதி மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளக்கியது.
இந்த கொலை தொடர்பில், சஞ்சய் ராய் என்பவரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். இவருக்கு எதிரான சியால்தா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது. சி.பி.ஐ., அதிகாரிகள், 120க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதன் அடிப்படையில் சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு சாகும் வரை சிறை என்ற வகையிலான ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சியால்தா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மேற்கு வங்க அரசு சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அத்துடன், சி.பி.ஐ., தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை, அந்த குற்றத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேபாங்சு பசக், வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Appeal filed by the CBI in the Kolkata trainee doctor murder case