முதல்வர் மு.க ஸ்டாலின் விடுத்த அழைப்பு.. முதல் ஆளாய் ஓகே சொன்ன கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு நெருக்கடி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்களில் அரசியல் ரீதியில் தனது அதிகாரத்தை செலுத்த ஆளுநர்கள் மூலம் மத்திய பாஜக அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கேரளா ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை ஆளுநருக்கு அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஆளுநர்கள் கிடப்பில் போட்டு வைத்தால் அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்தார். மாநில ஆளுநர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் மற்றும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை முதலாளாக ஏற்றுக் கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவையிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற போவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பாஜக அல்லாத மாநில அரசுகளின் அதிகாரங்களை அபகரிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் மத்திய மற்றும் அதன் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்.

மு.க ஸ்டாலின் அவர்களின் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன். கவர்னர்கள்/எல்ஜி அவர்களின் பணிகளைச் செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தையும் டெல்லி விதான்சபாவில் தாக்கல் செய்வோம்" என பதிவிட்டுள்ளார். பாஜக ஆளாத மாநிலங்கள் பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aravind Kejriwal accept Stalin invite resolution against governor


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->