நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்.. முக்கிய கோரிக்கை வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal


வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் கடந்த ஜூன் 12-ம் தேதி நடைபெற இருந்தது.

இதனிடையே ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மற்றும் திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. மேலும், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தின் காரணமாகவும் இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை ( ஜூன் 23ஆம் தேதி) எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பீகார் மாநில தலைநகர் தலைநகர் பாட்னாவில் நடைபெறுகிறது.

மேலும் இதுபோன்ற ஆலோசனை கூட்டங்களுக்கு கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைக்காமல் கட்சியைத் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியை தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவசர சட்டம் பெரும்பாலும் அரை மாநிலம் என்று கருதப்படும் டெல்லியில் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பதால், மற்ற மாநிலங்களில் இதை அறிவிக்க முடியாது என்று அர்த்தம் இல்லை. இத்தகைய அரசாணைகளை வெளியிடுவதன் மூலம் இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைத்த பட்டியலில் உள்ள அனைத்து விஷயங்களையும் மத்திய அரசு கலைத்து விடும்.

ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும் இதுபோன்ற அரசாணைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே மாநிலங்களின் சுயாட்சியை உறுதி செய்வதற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று திரண்டு எந்த பிரச்சினையில் விவாதிப்பது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aravind Kejriwal request to opposition party meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->