வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்திற்கு பாதிப்பா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி சரியான மழையை கொடுக்கவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் கிழக்கு திசை காற்றினால் தமிழகத்தில் மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக தென், மேற்கு, டெல்டா, வட கடலோரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இன்று டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்றுடன் மழை விலகும் என்றும், அதன் பின்னர், நாளை கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், நாளை மறுதினம் டெல்டா, மேற்கு மாவட்டங்களிலும் மழை விலகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்தார்.

மேலும், 'சென்னையில் இன்று இரவில் இருந்தும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக வருகிற 20-ந் தேதியில் இருந்தும் பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கும். அதன் தொடர்ச்சியாக வருகிற 23 அல்லது 24 உள்ளிட்ட தேதிகளில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

இது தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறலாம். இதனால், தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air low pressure form in bay of bengal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->