அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு.. 3 பேர் பலி..50,000 பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் 15 வருவாய் வட்டங்ங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளன. 10,321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

57,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் பல்வேறு சாலைகள் மற்றும் பாலங்கள், நீர் பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மீட்பு படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam flood affected 50000 peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->