அசாம் வெள்ளம்.. 21 லட்சம் பேர் பாதிப்பு.. பாலிவுட் நடிகர் அமீர் கான் ரூ.25 லட்சம் நிவாரணம்.! - Seithipunal
Seithipunal


அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

மேலும், முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாம் வெள்ளத்திற்கு 27 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த எண்ணிக்கை தற்போது 21 லட்சமாக குறைந்துள்ளது.

அசாம் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக, அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்தை வழங்கியுள்ளார். இந்த நிலையில் "அவரது அக்கறை மற்றும் தாராள மனப்பான்மைக்கு எனது மனமார்ந்த நன்றி" என்று அம்மாநில முதல் மந்திரி டுவீட் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam flood Bollywood actor Amir Khan 25 lakhs cm relief Fund


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->