அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு.. 45 லட்சம் பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

மேலும், முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது .

மேலும்,  30 மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 30 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் அமைக்கப்பட்டுள்ள 759 நிவாரண முகாம்களில் மொத்தம் 2.84 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam floods 107 peoples death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->