கோவையில் மசாஜ், நீராவி குளியல் என ஆயுர்வேத சிகிச்சையில் ஓ.பன்னீர்செல்வம்..!
O Panneerselvam undergoing Ayurvedic treatment including massage and steam baths in Coimbatore
கோவையில் உள்ள கணபதியில் இயற்கை நல மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் இங்கு அடிக்கடி செல்வது வழக்கம். இங்கு நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் 02 அல்லது 03 நாட்கள் அவர் அங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என கூறப்கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
ஆனால், வழக்கமாக பாஜகவின் மேலிட தலைவர்களை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அமித்ஷா சந்திப்பை தவிர்த்துவிட்டு, கோவையில் இயற்கை நல சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
O Panneerselvam undergoing Ayurvedic treatment including massage and steam baths in Coimbatore