'பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும்' ; நமீதா நச் பதில்..!
BJP and AIADMK What will the alliance be like Namitha reply
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசியல் களம் தற்போதே சூடுபிக்க தொடங்கிவிட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளது. சென்னை வந்த அமித்ஷா நேற்று அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான நமீதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் அ.தி.மு.க. கூட்டணி எப்படி இருக்கும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். தமிழக பா.ஜ.க.வினர் இடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும்' என்று நமீதா பதிலளித்துள்ளார்.
English Summary
BJP and AIADMK What will the alliance be like Namitha reply