ஜெயிலர் 2 படப்பிடிப்பில் படையப்பாவை மீண்டும் சந்தித்த நினைவை பகிர்ந்த நீலாம்பரி..!
Ramya Krishnan shared her memories of Padayappa during the shooting of Jailer 2
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயகத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்குமேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஜெயிலர் 2' இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இத்திடைப்படத்தின் படப்படிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்திற்கும் மனைவியாக நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில் படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு, ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் என பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் அப்பதிவை பதிவிட்டுள்ளார்.
English Summary
Ramya Krishnan shared her memories of Padayappa during the shooting of Jailer 2