ஆம் ஆத்மிக்கு ஆறுதல் தந்த அதிஷி... கல்காஜி தொகுதியில் வெற்றி!
Atishis consolation for AAP Victory in Kalkaji constituency!
கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்ட அம்மாநில முதல்-மந்திரி அதிஷி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வீழ்த்தியுள்ளார்
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் மந்திரியுமான கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதியில் துவக்கம் முதலே கெஜ்ரிவால் பின்னடவை சந்தித்தார்.அவரை எதிர்த்து போட்டி போட்ட பாஜகவின் பர்வேஷ் குமார் முன்னிலை பெற்றார். சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் கெஜ்ரிவாலுக்கு கடும் இழுபறியான நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதியில் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். 2013- முதல் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்று வந்த கெஜ்ரிவால், பாஜகவின் பர்வேஷ்வெர்மாவிடம் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல இந்த தேர்தலில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக அம்மாநில முதல்-மந்திரி அதிஷி போட்டியிட்டார். அந்தவகையில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்ட அம்மாநில முதல்-மந்திரி அதிஷி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வீழ்த்தியுள்ளார்.இதற்கிடையே, ஜங்புராவில் மணீஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தியில் சத்யேந்திர் ஆகிய ஆம் ஆத்மியின் பிற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Atishis consolation for AAP Victory in Kalkaji constituency!