விசாரணைக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரி மீது தாக்குதல் - டெல்லியில் பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் தென்மேற்கு பகுதியில் அமைந்த பிஜ்வாசன் பகுதியில், இணையதள மோசடியுடன் தொடர்புடைய பணமோசடி பற்றிய வழக்கு குறித்து விசாரணை செய்வதற்காக அமலாக்க துறை குழுவினர் இன்று சென்றனர்.

பி.பி.பி.ஒய்.எல். என்ற இணையதள செயலியின் மோசடியுடன் தொடர்புடைய இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அசோக் சர்மா மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர் அதிகாரிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். 

இந்தத் தாக்குதலில் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவாகி உள்ளது. 

இதன்பின்பு நிலைமை கட்டுக்குள் வந்தது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் சோதனைக்கு சென்ற அமலாக்க துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attack to enforcement officer in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->