ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?
August GST Income Report
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூலானதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. மேலும், ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி ரூ. 1.49 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது.
இதனை அடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி ரூ.1.43 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.1,12,020 கோடியுடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாகும். மேலும், 6-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ரூ.1,43,612 கோடியில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.24,710 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.30,951 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.77,782 கோடியும், செஸ் ரூ.10,168 கோடியும் வசூலானதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.