விடாமல் ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுநர் - ஆத்திரத்தில் அரிவாளை நீட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் இருந்து மஞ்சேரி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து கொண்டோட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக வழிவிடாமல் சென்றுள்ளது.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பலமுறை வழிவிடுமாறு ஹாரன் அடித்துள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்து வெளியே நீட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியது.

இந்தச் சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சம்சுதீன் அரிவாளை கூர்படுத்துவதற்காக கொண்டு சென்றதும், அப்போது பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பலமுறை ஹாரன் அடித்ததால் ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து காட்டியதும் தெரிய வந்தது. 

பேருந்து ஓட்டுநர் வழிவிடுமாறு தொடர்ந்து ஹாரன் அடித்ததால், ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை வெளியில் நீட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

auto driver arrested for showing machete in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->