பெங்களூர் || பலமுறை கோரியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்.! மழைநீரில் குளித்து மக்கள் போராட்டம்..!
banglore heavy rain Stagnant rainwater people strike
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் கடந்த மாதம் பெய்த கனமழையில், மக்கள் வெள்ளநீரில் சிக்கி தவித்தனர். இதனால், ஐ.டி. ஊழியர்கள் உள்பட பலர் டிராக்டரில் தங்களது பணியிடங்களுக்கு சென்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பெங்களூருவில் மீண்டும் மக்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சாலைகளிலும் வெள்ள நீர் வடிந்து செல்வதற்கு வழியில்லாத சூழல் காணப்படுகிறது.
இதேபோன்று, கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள தெருக்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. அம்மாவட்டத்தின் ஹலிகேரி பகுதியில் 4 கி.மீ. தொலைவுக்கு சாலை முழுவதும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது.
இதனால், உள்ளூரில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ஹலிகேரி பகுதியில் வசிக்க கூடிய மக்கள், தெருக்களில் மழை நீர் தேங்கியிருந்த இடத்திற்கு திரண்டு வந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி தேங்கிய சேறு நிறைந்த நீரை வாளியில் எடுத்து உடலின் மீது ஊற்றி குளித்தனர்.
அப்போது, அவர்கள் சாலைகளை சீர் செய்யும்படி அதிகாரிகளிடம் பல முறை வேண்டுகோள் வைத்து விட்டோம். ஆனால், அதில் பலனில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனை அப்பகுதியில் வசிப்பவர்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
English Summary
banglore heavy rain Stagnant rainwater people strike